• September 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காலி பாட்​டில்​களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக டாஸ்​மாக் அதிகாரி​கள் தெரி​வித்​தனர். காலி மது​பான பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை நடை​முறைபடுத்த சென்னை உயர் நீதி​மன்றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து தற்​போது 20 மாவட்​டங்​களில் 1,800 கடைகளில் இத்​திட்​டத்தை டாஸ்மாக் செயல்படுத்தி வருகிறது. இ​தில் நடை​முறை சிக்​கல்​கள் உள்​ளன. குறிப்​பாக கூடு​தல் பணிச்​சுமை ஏற்​படு​கிறது.

காலி மது​பாட்​டில்​களை சேமிக்க இடமில்​லை, பாட்​டில்​களை கையாள போதிய பாது​காப்பு உபகரணங்​கள் இல்​லை என பணியாளர்​கள் தெரிவிக்​கின்​றனர். இத்​திட்​டத்​தால் பணி​யாளர்​களுக்கு ஏற்​படும் பணிச்​சுமையை அறிந்​து, அவற்றை எவ்​வாறு சரி செய்​வது என்று மண்டல முது​நிலை மேலா​ளர்​கள் தலை​மை​யில் குழு அமைத்து ஊழியர்​கள் கூட்​டத்தை நடத்​தி, பணி​யாளர்​களின் சுமை​கள் குறித்​தும் ஆய்வு செய்ய டாஸ்​மாக் நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *