
சென்னை: ‘கரூர் சம்பவம், விபத்துபோல தெரியவில்லை. திட்டமிட்ட சதிபோலவே தெரிகிறது. எனவே, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியிடம் தவெகவினர் முறையிட்டனர்.
உயர் நீதிமன்றத்துக்கு தற்போது தசரா விடுமுறை என்பதால், விடுமுறைக்கால நீதிபதியான தண்டபாணியை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக வழக்கறிஞர் அணியினர் நேற்று சந்தித்தனர். அப்போது, நீதிபதியிடம் தவெக வழக்கறிஞர் அறிவழகன், இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் முறையிட்டதாவது: கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம், விபத்துபோல தெரியவில்லை.