
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப் பாதை பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித் தடம் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன,