
சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதிலளிக்காமல் சென்றார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், இச்சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணியிடம் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.