
த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை.
உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்துக்கு இந்த உழவர் சந்தை திடலில்தான் அனுமதி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
அதேமாதிரி, முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இதே இடத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் பெரிதாக நடந்ததில்லை என்றும் இங்கிருக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை போட மட்டும் வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.
லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதி நகரின் முக்கிய பகுதியாக இருக்கிறது. இந்த ரவுண்டானாவை கடந்துதான் அமராவதி பாலம் வழியாக திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

போக்குவரத்து இயக்கம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால், அரசியல் கட்சிகளின் கூட்டம் உழவர் சந்தை பகுதிகளிலேயே அதிகம் நடக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
நாங்கள் கேட்ட உழவர் சந்தை அல்லது லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கூட்டம் கூட்டியிருந்தால் சேதாரம் ஏற்பட்டிருக்காது என தவெக தரப்பில் கூறுவது குறிப்பிடத்தக்கது.