
கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்திருக்கிறார்.
“மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற அசாம்பாவிதங்கள், பலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது.
எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாமர மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு குழந்தை காவியா 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறது. வாக்குரிமை கூட கிடையாது.
இனிவரும் காலங்களில் இதையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மரணங்களைத் தவிர்க்க வேண்டும்.
7 மணி நேரம் 40 நிமிடம் தண்ணீர், உணவு இல்லாமல் கும்பலில் சிக்கி என்ன பண்ணுவார்கள்.
காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்க ஆலோசனை செய்துகொண்டிருக்கிறோம் ” என்று கூறியிருக்கிறார்.