
கரூர்: கரூரில் நேற்று நடந்த கூட்ட நெரிசல் காரணமாக விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசும் விஜய்யும் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கரூரில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததையடுத்து, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று காலை (ஞாயிற்றுக் கிழமை), கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.