
கரூர்: கரூர் துயர சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து உரிய தீர்வு காணவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் ஆளுநரும், மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.