
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள‌ ராமதீர்த்த மலை குகையில் ரஷ்யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கர்நாடக போலீஸார் அவரை மீட்டு கடந்த ஜூலையில் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் நினா குடினாவின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்ஸ்டெயின் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.