
நேற்று நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 1 3/4 வயது குழந்தை உயிரிழந்திருக்கிறது.
இந்தக் குழந்தையின் பெயர் குரு விஷ்ணு. இவரது பெற்றோர் விமல், மாதேஸ்வரி. விமலின் அக்கா குரு விஷ்ணுவைப் பரப்புரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கூட்ட நெரிசலில் குழந்தை கீழே விழுந்துள்ளது. அங்கே கூடியிருந்த மக்கள் நெரிசலில் குழந்தையின் வயிறு மற்றும் கால் பகுதியில் மிதித்துள்ளனர். இதனால், குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். இவரைக் காண ஏகப்பட்ட மக்கள் கூடியிருந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 குழந்தைகள் அடங்குவர். 13 ஆண்களும், 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அதிகாலையிலேயே கரூர் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
காயமடைந்தவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கரூர் வந்துள்ளார்.