
நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நாமக்கல், சேலம், மதுரையில் இருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷும் கரூர் சென்றார்கள்.
இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றுவிட்டார்.
அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். சிகிச்சையில் இருப்பவர்களிடம் நலம் விசாரித்தார்.
அது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy pic.twitter.com/Z9K2TZs7NW
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 28, 2025