
மதுரை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணியாற்றியபோது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்ளிட்டோர் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர்பாட்சா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது. அதன்பேரில், அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.