• September 28, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் மக்களைச் சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதாலும், நிகழ்ச்சியைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 31-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கரூர்

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அவர், “இன்று தவெக கட்சியின் தலைவர் விஜய் கரூரில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பொழுது, கூட்டம் நெரிசில் ஏற்பட்டு மூச்சு திணறி பல பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பல பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு அரசு உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அரசு இறந்த குடும்பத்தாருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” எனப் பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *