• September 28, 2025
  • NewsEditor
  • 0

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.

கூட்ட நெரிசலில் 31க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்

இந்த நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தமிழக காவல்துறை வதியில்லாத வேலுசாமிபுரத்தை ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை.

அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில்,

“விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது! ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

TVK Vijay Karur Stampede
TVK Vijay Karur Stampede

TVK Vijay Karur Stampede – என்ன நடந்தது?

விஜய் கரூரில் இன்று பரப்புரை மேற்கொண்டார். வேலுசாமிபுரத்துக்கு தாமதமாக வந்த அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது வாகனத்தின் அருகே தொண்டர்கள் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்தனர். விஜய்யே பேச்சை நிறுத்திவிட்டு, தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து, ஆம்புலன்ஸையும் அழைத்து உதவினார்.

மக்கள் கூட்ட நெரிசலில் தவிக்க, விரைந்து பேச்சை முடித்துவிட்டு, பேப்பரில் இருந்ததை வேக வேகமாக வாசித்துவிட்டு தனது பிரசார பேச்சை முடித்துக்கொண்டார்.

விஜய் பேசும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மயங்கியவர்களை மீட்டுச் செல்ல கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்ததால் கூட்டத்தின் நடுவே தள்ளுமுள்ளும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிலர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருகின்றனர். இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *