
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.
கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில்தான் இருப்பார்கள்” என்று பேசியிருக்கிறார்.