
‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஓப்பிட்டு வரும் கருத்துகள் தொடர்பாக ‘ஓஜி’ இயக்குநர் சுஜீத் விளக்கமளித்துள்ளார்.
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, தெலுங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான சமயத்தில் இருந்தே ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஏனென்றால் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘ஓஜி சம்பவம்’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது.