• September 27, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி.

அடுத்தடுத்து கோலிவுட், டோலிவுட், சாண்டில்வுட், மல்லுவுட் என அனைத்து சினிமாக்களிலும் வெற்றிகரமாக வலம் வந்தார்.

கதாநாயகியாக மட்டுமின்றி துணைக் கதாபாத்திரங்களில், வில்லி கதாபாத்திரங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றவர்.

வரலட்சுமி சரத்குமார்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிகோலய் சச்தேவ் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார் வரலட்சுமி.

நடிகையாக இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இயங்கியவர் தற்போது இயக்குநராகவும் அவதாரமெடுக்கவிருக்கிறார். அது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

வரலட்சுமி இயக்கும் இந்தப் படத்திற்கு ‘சரஸ்வதி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

நடிகர்கள் நவீன் சந்திரா, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

அத்தோடு வரலட்சுமியும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் கமிட்டாகியிருக்கிறார்.

தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இப்படத்தை தயாரிக்கிறார்.

வரலட்சுமியின் இந்த பயணத்திற்கு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *