• September 27, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது வாரமாக, நாமக்கல்லில் இன்று மக்களைச் சந்தித்தார். காலை 8:45 மணிக்கே தொடங்கும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்த நிலையில், 9:30 மணியளவில்தான் திருச்சி விமான நிலையத்துக்கே விஜய் வந்தடைந்தார்.

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நமக்கல்லுக்கு வந்த விஜய், தனது பிரசார வாகனத்தில் பிரசார இடத்துக்கு வந்து உரையாற்ற பிற்பகல் 2:30 ஆகிவிட்டது.

அதைத்தொடர்ந்து த.வெ.க தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார்.

வாக்குறுதி நம்பர் 456 கொடுத்தது யாரு?

“தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டுகிற மண் இது. நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சுகிற `தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற வரிகளை விஜயகாந்த் சார் சொன்னாரு. அதை எழுதியவர் நாமக்கல் மேகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைதான்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்கியதும் இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன் அவர்கள்தான். அவருக்கு இதே நாமக்கலில் ஒரு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி நம்பர் 456 கொடுத்தது யாரு? சொன்னாங்களே செஞ்சாங்களா?

சொன்னாங்களே செஞ்சாங்களா?

அனைத்து ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் – வாக்குறுதி நம்பர் 50.

கொப்பரைத் தேங்காய் அரசே கொள்முதல் செய்யும். அதிலிருந்து தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – வாக்குறுதி நம்பர் 66

நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – வாக்குறுதி நம்பர் 68

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமல்லாமல் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் – வாக்குறுதி நம்பர் 152

இதெல்லாம் சொன்னாங்களே செஞ்சாங்களா…

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகின்ற இந்த நாமக்கல் மாவட்டத்தில், முட்டைகள் வீணாகாமல் பாதுகாப்பாக வைக்க சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பாக்டீரியா மற்றும் வைரலாஜிக்கல் பரிசோதனையை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கிறது.

ஆனால், இதுவரைக்கும் ஆண்ட கட்சிகளும், இப்போது ஆளும் கட்சியும் சரி அதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.

கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு தவெக ஆட்சியில் கடும் தண்டனை!

தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டில் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக விசைத்தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களை குறிவைத்து அந்த கிட்னி திருட்டு நடந்திருக்கு என்று சொல்கிறார்கள்.

இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்ம ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

இந்த கிட்னி திருட்டுக்கான ஆரம்பம் கந்து வட்டி கொடுமையில் இருக்கிறது.

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் ஏமாற்று மாடல் தி.மு.க அரசு மேம்படுத்தாத காரணத்தால் கிட்னியை விற்கும் அளவுக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கான தீர்வுகளை எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்வோம்

இவர் புதுசா என்ன சொல்லிவிட்டார் என்று கேற்றார்கள்…

அடிப்படை விஷயங்களில் எந்த சமரசமும் இல்லாமல் சரியானதை செய்வோம் என்று சொன்னதற்கு, `இதைத்தானே எல்லோரும் சொன்னாங்க. இவர் புதுசா என்ன சொல்லிவிட்டார். புதுசாக எதுவுமே சொல்லவில்லையே’ என்கிறார்கள்.

அரசியல் மேதைகளே, நல்ல சாப்பாடு, கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, அதற்கான சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கை இதுதானே ஒரு மனுஷனுக்கு அடிப்படை தேவை.

இன்றைக்கும் மனுஷனுக்கு அதுதானே தேவை. அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி.

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

அதனால்தான் நடைக்கு சாத்தியமானதை சொல்வோம், செய்வோம் என்கிறோம். இந்த தி.மு.க மாதிரி பொய்யான வாக்குறுதி கொடுக்க மாட்டோம்.

புதுசா சொல்லுங்க சொல்லுங்கணா என்னத்த புதுசா சொல்றது.

செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும்.

இந்த மாதிரி அடித்து விடுவோமா… நம் cm அடித்து விடுவதைப் போல நாமும் அடித்து விடுவோமா…

திமுக, அதிமுக, பாஜக மீது நேரடி தாக்கு!

இந்த பாசிச பா.ஜ.க-வுடன் நாங்கள் எப்போதும் ஒத்துப் போக மாட்டோம்.

இந்த தி.மு.க மாதிரி மறைமுக உறவில் பா.ஜ.க-வுடன் எப்போதும் இருக்க மாட்டோம்.

மூச்சுக்கு 300 தடவை அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்னதை மறந்து விட்டு ஒரு பொருந்தா கூட்டணியாக ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு, தமிழ்நாட்டோட நலனுக்காக பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்களே அவர்களை மாதிரியும் நாம் இருக்க மாட்டோம்.

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

இந்த பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டது. நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்கு தேவையான நிதியை முழுசா கொடுத்து விட்டார்களா? அப்புறம் எதுக்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை புரட்சித்தலைவரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள்.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி மீது மக்களுக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதேசமயம் இந்த தி.மு.க குடும்பம் பா.ஜ.க-வுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா…

வரப்போகின்ற தேர்தலில் தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் அது நீங்கள் பா.ஜ.க-வுக்கு ஓட்டு போட்ட மாதிரி.

இப்படி ஒரு மோசமான ஆட்சியை கொடுக்கின்ற தி.மு.க அரசு மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டுமா… உங்கள் உண்மையான மக்களாட்சி த.வெ.க இப்போது ஆட்சியமைக்க வேண்டுமா…

என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா… ஒரு கை பார்த்திடலாம்… நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

விஜய் உரையாற்றி முடித்த பிறகு தொண்டர்கள் தரப்பிலிருந்து அவருக்கு செங்கோல் அளிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *