
ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும்.
மேலும், புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலமாக இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.