
சமீபத்தில் நடிகை சாய் பல்லவியும் அவரின் தங்கையும் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவியும் அவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
இணையத்தில் சிலர் சாய் பல்லவியின் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்ச்சித்திருந்தனர்.
இந்த நிலையில் சாய்பல்லவி தன் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதன் கேப்ஷனில் “இது ஏஐ புகைப்படம் அல்ல உண்மையான புகைப்படம் என்று” தெரிவித்திருந்தார். வைரலான புகைப்படம் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.