
திருப்பதி: திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இண்டர்மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து யுகந்தர், கடப்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை அதிகாரிகளின் உதவியுடன், ஹைதராபாத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் தொலைதூர கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து அடுத்தடுத்து 4 பட்டப் படிப்புகளை அவர் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து 3 பட்ட மேற்படிப்புகளை படித்து முடித்துள்ளார். சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் பெற்றதால் தங்கப் பதக்கம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்தது. வரும் 30-ம் தேதி பல்கலைக்கழகத்தின் 26-வது ஆண்டு விழாவில், யுகந்தருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.