• September 27, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்போது 75 லட்​சம் பெண்​களுக்கு தலா ரூ.10,000 நிதி​யுத​வியை அவர் வழங்​கி​னார். பிஹாரில் முதல்​வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​டணி அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநில அரசு சார்​பில் முதல்​வரின் மகளிர் வேலை​வாய்ப்பு திட்​டம் அண்​மை​யில் அறிவிக்​கப்​பட்​டது.

இதன்​படி பிஹாரில் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் தலா ஒரு பெண்​ணுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதி​யுதவி வழங்​கப்​படும். இந்த திட்​டத்​தில் இணைந்து சாதனை படைக்​கும் பெண்​களுக்கு கூடு​தலாக ரூ.2 லட்​சம் வரை நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று முதல்​வர் நிதிஷ் குமார் உறுதி அளித்து உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *