
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 31 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே வாகரையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக தங்கிப் பணிபுரிந்து வந்த 31 பேரை மே 24-ம் தேதி கள்ளிமந்தையம் போலீஸார் கைது செய்தனர். இதில் ஒரு சிறுவனை மட்டும் மதுரை சிறுவர்கள் காப்பகத்திலும், மற்ற 30 பேரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.