• September 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கூடு​தல் நீதிப​தி​களாக என். செந்​தில்​கு​மார், ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் இவர்​கள் இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களக நியமிக்க உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் பரிந்​துரை செய்​திருந்​தது. அந்த பரிந்​துரையை ஏற்று இவர்​களை நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்க குடியரசுத் தலை​வரும் உத்​தர​விட்டு இருந்​தார்.

அதன்​படி, இவர்​கள் இரு​வருக்​கும் நேற்று உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி எம்​.எம்​. வஸ்​தவா நிரந்தர நீதிப​தி​களாக பதவிப்​பிர​மாணம் செய்து வைத்​தார். அதன்​படி உறு​தி​மொழி ஏற்று இரு​வரும் நேற்று நிரந்தர நீதிப​தி​களாக பதவி​யேற்​றுக்​கொண்​டனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *