
சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 26 புதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அரிய நூல்கள், நாட்டுடைமை நூல்கள், மூத்த வரலாற்று அறிஞர்களின் தமிழ்நாட்டு வரலாறு அரிய நூல்கள், நூற்றாண்டு காணும் ஆளுமைகள், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம், செவ்வியல் நூல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் 26 புதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.