
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் த.அமிர்தகுமார் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: அக்.1-ம் தேதி ஆயுத பூஜை, 2-ம் தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை புதன், வியாழக்கிழமைகளில் வருகிறது. தொடர்ந்து அக்.3-ம் தேதி வேலை நாளாக உள்ளது. இதைத் தொடர்ந்து அக்.4,5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாகும். எனவே, அக்.3-ம் தேதி ஒரு நாள்மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.