
புதுடெல்லி: கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, தொடரப்பட்ட தேர்தல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வரும், அப்போதைய திமுக பொருளாளருமான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.