• September 26, 2025
  • NewsEditor
  • 0

பாலஸ்தீனம் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை இன்னும் 10 நாள்களில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது.

உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை போரை நிறுத்த வலியுறுத்தினாலும், கண்டித்தாலும் அமெரிக்கவின் ஆயுத உதவியுடன் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து போரைத் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது இஸ்ரேல்.

பலியான குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 20,000-க்கும் மேல். எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களின் உயர்களைக் காப்பாற்ற ஐ.நா-வில் பாலஸ்தீனத்தை தனி நாடக அங்கீகரிக்கும் தீர்மானத்தை 157 நாடுகள் நிறைவேற்றின.

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் பட்டினியில் வாடும் பாலஸ்தீனியர்கள்

இத்தகைய சூழலில் ஐ.நா பொதுச் சபையின் 80-வது அமர்வில் உரையாற்ற ஐ.நா வருகை தந்தார் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு.

ஐ.நா-வில் நெதன்யாகு உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியில் ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த, அவைக்குலேயேம் பலர் அவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வெளியேறினர்.

ஆனாலும், அவையில் தனது உரையைத் தொடர்ந்த நெதன்யாகு, “உலகில் பெரும்பாலானோர் அக்டோபர் 7, 2023-ஐ மறந்துவிட்டனர். ஆனால், எங்களுக்கு நினைவிருக்கிறது.

207 பணயக்கைதிகள்தான் நாட்டுக்கு திரும்பியிருக்கின்றனர். காஸாவில் மீதமிருக்கும் 48 பீரில் 20 பேர்தான் உயிரோடு இருக்கின்றனர்.

`நாங்கள் உங்களை மறக்கவில்லை. உங்கள் அனைவரையும் மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது’.

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எங்கள் மக்களை விடுவியுங்கள் (ஹமாஸ்). அப்படிச் செய்தால் நீங்கள் உயிர் வாழலாம். இல்லையெனில் இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்.

ஐ.நா பொதுச் சபை அமர்வில் நெதன்யாகு
நெதன்யாகு

இஸ்ரேலும் அமெரிக்காவும் பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை உலகின் மற்ற தலைவர்களை விடவும் அதிபர் டிரம்ப் நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

இஸ்ரேல் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு நேர்மாறானது.

காஸாவை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு மில்லியன் முறை கூறினோம்.

ஐ.நா பொதுச் சபை அமர்வு
ஐ.நா பொதுச் சபை அமர்வு

இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் ஆபத்திலிருந்து வெளியேறுமாறு கெஞ்சுமா… நாஜிக்கள் யூதர்களை வெளியேறச் சொன்னார்களா…

ஹமாஸை சேர்ந்தவர்கள் உணவைத் திருடி, பதுக்கி வைத்து விற்பதால் காஸா மக்கள் பட்டினியாக இருப்பார்கள்.

பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடக அங்கீகரித்தது இஸ்ரேலைப் பொறுத்தவரை தேசிய தற்கொலை.

சுத்த பைத்தியக்காரத்தனம். நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்” என்று கூறி உரையை முடித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *