• September 26, 2025
  • NewsEditor
  • 0

இந்திய ராணுவத்துக்கு 1960 முதல் சேவையாற்றிவந்த MiG-21 ரக ஜெட் விமானங்கள் ஓய்வு பெற்றுவிட்டன.

இவை 1965 இந்தியா–பாகிஸ்தான் போர், 1971 இந்தியா–பாகிஸ்தான் போர், 1999 கார்கில் போர் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய மோதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் இந்தியாவின் முன்னணி தாக்குதல் விமானங்களாக இருந்துள்ளன.

MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்

சோவியத் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்த விமானங்களை ஒட்டுமொத்தமாக விமானப்படையிலிருந்து நீக்கியிருக்கிறது இந்திய ராணுவம்.

 இந்திய விமானப்படையில் முக்கியமான அங்கமாக இவை மாறியதால், விமானப்படையின் திறனை அதிகரிக்க 870க்கும் மேற்பட்ட விமானங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. இதில் சில மாறுதல்களைச் செய்து MiG-21 பைசன் என்ற ரகத்தையும் கொண்டுள்ளது.

பைசன் ரகம் நான்காவது தலைமுறைப் போர் விமானங்களான F-16, Mirage-2000 உடன் போட்டியிடும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் சாதாரண MiG-21 இரண்டாம் தலைமுறை ஜெட் விமானங்கள், ‘Dogfight’ எனக் கூறப்படும் நேருக்கு நேர் சண்டையில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

விமானப்படையில் MiG-21 இடத்தை நிரப்பும் விமானமாக இலகுரக போர் விமானம் தேஜாஸ் இருக்கும் என்கின்றனர். தேஜாஸ் MiG-21-இன் வாரிசாக அறியப்படுகிறது. இதுபோல தூக்கி எறியப்படும் விமானங்கள் என்ன ஆகும் என்பதைக் காணலாம்.

பழைய விமானங்கள் என்ன ஆகும்?

1. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை அருங்காட்சியகத்தில் MiG-21 விமானங்கள் பார்வைக்காக வைக்கப்படலாம். உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் இதற்கான சாத்தியங்கள் அதிகம்.

2. இதுபோல ஓய்வுபெறும் விமானங்கள் உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படலாம். கல்லூரிகள், விமானப்படை நிலையங்களில் காட்சிக்காக வைக்கப்படும்.

3. MiG-21 பறக்கும் நிலையில் பேணப்பட்டு விண்டேஜ் படைகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படலாம்.

4. சிலவற்றைப் பயிற்சிக்காகப் பயன்படுத்துவர். மெக்கானிக்குகள், விமானிகள், பொறியாளர்கள் கற்க உதவும்.

5. மோசமான நிலையில் இருப்பவற்றை ஸ்கிராப் செய்து மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவருவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *