• September 26, 2025
  • NewsEditor
  • 0

KPY பாலா தொடர்ந்து சிலருக்கு உதவி செய்துவருவதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் உதவி செய்வதற்குப் பின்னணியில் சில திட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக, அவர் வழங்கிய ஆம்புலன்ஸ்களின் காலாவதி தேதி, அவற்றின் எண், உதவி பெறுபவர்களின் தேர்வு, அவர்களைப் படம் பிடிக்கும் விதம், அவர்களின் உணர்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து பரப்புவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்படுகின்றன.

KPY Bala: “எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!” – KPY பாலா காட்டம்!

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் KPY பாலா வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ‘எனக்கு எந்த சர்வதேச தொடர்பும் இல்லை. நான் தினக்கூலி யாருக்கும் கைகூலி இல்லை’ எனத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து KPY பாலாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், KPY பாலாவுக்கு ஆதரவாக, “அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்னை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி.

எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்?” என்று ஆதரவு தெரிவித்திருந்தார்.

KPY பாலா பேட்டி

KPY பாலா: “பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?” – சீமான் கேள்வி

விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன்

இந்நிலையில் KPY பாலா, “நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னுடைய வேலையே, என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இல்லை… என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *