
சென்னை: தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும், பழைய நிலை இந்த ஆண்டும் தொடரக்கூடாது என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலத்தின் போது, சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேக்கமடைந்ததால் சுகாதாரத்திலும், போக்குவரத்திலும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.