
விழுப்புரம்: திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் உட்பட 6 பேர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி இருந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த 6 பேரில் சி.வி.சண்முகமும் ஒருவர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசிக்கும் சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.