• September 26, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்லை என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற சிறுநீரகம் மற்​றும் உடல் உறுப்​பு​கள் திருட்டு தொடர்​பாக விசா​ரிக்க தென் மண்டல ஐ.ஜி. பிரே​மானந்த் சின்ஹா தலை​மை​யில், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர்​கள் நிஷா, சிலம்​பரசன், கார்த்​தி​கேயன், அரவிந்த் ஆகியோர் அடங்​கிய சிறப்பு படை அமைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *