
சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் நேற்று போலீஸார் முன்பு சரணடைந்தனர். மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. இந்நிலையில், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் தீவிரவாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒழிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை துறந்து சரணடைய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு நிதியுதவியுடன் வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளன.