
2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதான இது, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன், மணிகண்டன், ஜார்ஜ் மரியான், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர், நிகில் முருகன் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இளம் இசையமைப்பாளராகக் கவனம் ஈர்த்து வரும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலைமாமனி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
— Anirudh Ravichander (@anirudhofficial) September 25, 2025
இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் அனிருத், “மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் இயல் இசை நாடக சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசைக் குழுவினர், அதை விட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.