• September 25, 2025
  • NewsEditor
  • 0

சந்தானம் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் சர்வர் சுந்தரம்’.

திரைப்படம் முடிக்கப்பட்டப் பிறகு சில விஷயங்களால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

சர்வர் சுந்தரம்

மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானத்தின் இந்த திரைப்படமும் திரைக்கு எப்போது வரும் என பலரும் காத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஆனந்த் பால்கி `சர்வர் சுந்தரம்’ திரைப்படம் தொடர்பாக ஒரு காணொளியில் பேசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் ஆனந்த் பால்கி, “சர்வர் சுந்தரம்’ திரைப்படம் சுடச்சுட அப்படியேதான் இருக்கிறது. திரைப்படம் வெளிவரும், ஆனால், எப்போது வருமென தெரியாது.

படம் எப்போது வரும்’ என்றுதான் பலரும் என்னிடம் கேட்கிற கேள்வி. அந்தக் கேள்வியை நானே எனக்குள் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். வரும், நிச்சயமாக வெளிவரும். பெரிதாக வரும்! ரிலீஸ் தாமதமாகிவிட்டது.

சினிமாவே சவால்தான். எல்லாவற்றையும் தாண்டி குதித்து, சவால்கள் அனைத்தையும் படம் வெளிவருவதற்கு முன்பே சர்வர் சுந்தரம்’ பார்த்துவிட்டது.

சர்வர் சுந்தரம்’ டைட்டிலை தொடுவதற்கு நாங்கள் எவ்வளவு பயந்தோமென விளக்கவே முடியாது. அது ஒரு ஐகானிக் டைட்டில். நான் சந்தானம் சாரிடம் டைட்டில் சர்வர் சுந்தரம்’ என்று சொல்லும்போது அவர் அதிர்ச்சி ரியாக்ஷன்தான் கொடுத்தார்.

டார்கெட்டை வானத்தை நோக்கி வைத்தால், கூரையைத் தொட்டுவிடலாம்’ என்று சொல்வார்கள். அதைப்போல என்னுடைய டார்கெட்டும் ரொம்ப பெரிதாக இருந்தது.

சந்தானம் சாரை நீங்கள் ஒரு காமெடியனாகவே பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர் பயங்கரமான நடிகர். அவருக்குள் இருக்கும் நடிகரை `சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வெளியே காண்பிக்கும்.” எனக் கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *