
பவன் கல்யாணின் `They Call Him OG’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீயா ரெட்டி எனப் பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் குறித்தும், பவன் கல்யாணோடு நடித்த அனுபவம் குறித்தும் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிடம் பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீயா ரெட்டி.
ஸ்ரீயா ரெட்டி, “OG’ படத்தில் நான் வயதானவராக நடிக்கிறேனோ என்ற கவலைகள் இருந்தன.
ஆனால் அது பெரிய விஷயமில்லை. ஏனெனில், இன்றைய வலிமையான பெண்ணாக எப்படி நடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்.
இன்றைய காலத்தில் பெண்கள் சூப்பர் ஹீரோக்கள். இந்தப் படத்தில் குவென்டின் டரான்டினோவின் பாணி மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
டரான்டினோவை இங்கு அழைத்து, இந்திய நட்சத்திரங்களுடன் ஒரு படம் செய்யச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது `OG’.

இந்தப் படம் ஒரு கூல்-லுக்கிங் ஆக்ஷன் படம், இது வழக்கமான தமிழ் அல்லது தெலுங்கு சினிமா ஸ்டைலில் இருக்காது.
பவன் கல்யாணின் ஆளுமை நம்மைத் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.
பெண்களை முன்னிலைப்படுத்துவதில் அவர் ஒரு முன்னோடி. அவர் மிகவும் படித்தவர். ஆன்மீகப் புரிதல் கொண்டவர்” என்றார்.