
சென்னை: இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி, விவாகரத்து கோரிய வழக்கில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.