• September 25, 2025
  • NewsEditor
  • 0

ஆப்பிரிக்காவின் ஜாம்பியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் காணப்படும் ‘இச்சிகோலோவா’ என்ற பிரமாண்ட காளான், உலகின் மிகப்பெரிய உண்ணக்கூடிய காளான் என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

வெறும் உணவுப் பொருளாக மட்டுமின்றி, இது ஒரு சூழலியல் அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த காளான், கரையான் புற்றுகளுடன் இணைந்து வளரும் ஒரு விசித்திரமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட வகை கரையான்கள், தங்கள் புற்றுகளுக்குள் ‘பூஞ்சைத் தோட்டங்கள்’ (fungus combs) எனப்படும் அமைப்பை உருவாக்குகின்றன. அதில் இந்த காளான்கள் வளர்கின்றன. இந்தக் காளான்களின் ‘குடை’ பகுதி சில நேரங்களில் ஒரு மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியது என்று கூறப்படுகிறது.

world’s largest mushroom Ichikawa

ஜாம்பியாவின் உள்ளூர் சமூகங்களுக்கு `இச்சிகோலோவா’ ஒரு மதிப்புமிக்க பருவகால உணவாகக் கருதப்படுகிறது. மழைகாலத்தின் வருகையை குறிக்கும் ஒரு கலாசார அடையாளமாகவும் இது கருதப்படுகிறது.

இச்சிகோலோவா காளான்கள், விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், இச்சிகோலோவாவை வணிக ரீதியாகப் பயிரிடுவது மிகவும் சவாலானது என்றும் குறிப்பிடுகின்றனர். இந்தக் காளான்கள் தற்போது இயற்கையாக காடுகளில் இருந்து மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *