
71-வது தேசிய விருது விழா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றிருந்தது.
மோகன்லால், ஷாருக்கான், விக்ராந்த் மாஸ்ஸி, ராணி முகர்ஜி என உச்ச நடிகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் த்ரிஷா தோஷர் என்ற 4 வயது சிறுமி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
‘நாள் 2’ என்ற மராத்திய திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அவர் வென்றிருக்கிறார்.
மேடையில் அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விருது பெற்ற காணொளியும் இணையத்தில் வைரலானது.
அந்தச் சிறுமியைப் பாராட்டி நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் கணக்கில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “அன்புள்ள த்ரிஷா தோஷர், எனது உரத்த கைதட்டல்கள் உங்களுக்கு!
நான் ஆறு வயதாக இருக்கும்போது எனது முதல் விருதைப் பெற்றேன், ஆனால் நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்!

அற்புதமான பணி, மேடம். உங்கள் அற்புதமான திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டு பதிவு இட்டிருக்கிறார்.