• September 25, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: ஆந்​திர சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத்​தொடர் அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. குழந்​தைப் பேறு குறித்து நேற்று நடை​பெற்ற விவாதத்​தில், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்​றுக்​கொள்​வது மிக​வும் ஆபத்​தானது. அறுவை சிகிச்சை முறை​யில் குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் நாட்​டிலேயே ஆந்​திரா முதலிடம் வகிக்​கிறது.

முகூர்த்த நேரத்​தில் குழந்தை பிறக்​கும் வகை​யில் அறுவை சிகிச்சை நேரத்தை நிர்​ண​யிக்​கிறார்​கள். இது மிக​வும் தவறாகும். பெற்​றோருக்கு சாதக​மாக அல்​லது மூட நம்​பிக்கை காரண​மாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்​றெடுக்​கும் சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. ஆனால், மருத்​துவ ரீதி​யாக தேவைப்​பட்​டால் மட்​டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *