• September 25, 2025
  • NewsEditor
  • 0

திருப்பதி கோயிலில் காணிக்கையாக பணம், நகைகள் வருவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால், நேற்று (செப். 24) விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் எண்டர்பிரைஸ் நிர்வாக இயக்குநர் புவ்வாடா மஸ்தான் ராவ் – ரேகா தம்பதியினர் திருப்பதி கோயிலுக்கு வைரக் கற்கள் பதித்த தங்கப் பூணூலைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

திருப்பதி கோயில்: பூணூல் காணிக்கை கொடுத்த போது

இந்தப் பூணூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தங்கத்தின் எடை 3 கிலோ 860 கிராம் ஆகும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வைரக்கற்களின் மதிப்பு ரூ.3.86 கோடி ஆகும்.

இன்றைய சென்னை தங்கம் நிலவரப்படி, இந்தப் பூணூலில் பயன்படுத்தி உள்ள தங்கத்தின் இன்றைய விலை ரூ. 4 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 600 ஆகும்.

ஆக, இன்றைய நிலவரப்படி, இந்த மொத்த பூணூலின் விலை ரூ.7,91,68,600.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *