• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ராயப்​பேட்​டை​யில் அதி​முக தலைமை அலு​வல​கம், மந்​தைவெளி 5-வது ட்ரஸ்ட் குறுக்​குத் தெரு​வில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் வீடு ஆகிய இரு இடங்​களுக்கு நேற்று குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் போலீ​ஸார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்​தினர்.

ஆனால், சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருளும் கண்​டெடுக்​கப்படாததால், இது புரளி என உறுதி செய்​யப்​பட்​டது. நேற்று முன்​தினம் தலை​மைச் செயலக வளாகத்​தில் உள்ள இந்​திய கடற்​படை நிர்​வாக அலு​வல​கம், நந்​தம்​பாக்​கம் வர்த்தக மையம், புரசை​வாக்​கத்​தில் உள்ள பிஎஸ்​என்​எல் அலு​வல​கம், தேனாம்​பேட்​டை​யில் உள்ள தலைமை கணக்கு தணிக்​கை​யாளர் அலு​வல​கம், பரங்​கிமலை ராணுவ அதி​காரி​கள் பயிற்சி மைய கணக்​காளர் அலு​வல​கம் உள்​ளிட்ட இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. சென்​னை​யில் கடந்த 2 நாட்​களில் சுமார் 10 இடங்​களுக்​கு குண்​டு மிரட்​டல்​ விடுக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *