
சென்னை: சென்னை கோட்டத்தில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.9.40 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, சென்னை மேற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சோழிங்கநல்லூர் கோட்டம் சென்னை தெற்கு-2 மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 9-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.