• September 25, 2025
  • NewsEditor
  • 0

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் தங்கமணி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளார்.

25 உறுப்பினர்களைக் கொண்டு ‘அண்ணாமலை ரசிகர் மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மேற்கு மாவட்டம் பாஜக தலைவர் ஹரி ராமன் திறந்து வைத்தார்.

அண்ணாமலை ரசிகர் மன்றம்

இது தொடர்பாக அண்ணாமலை ரசிகர் மன்ற தலைவர் தங்கமணியிடம் கேட்டபோது, “தமிழ்நாடு முழுவதும் சினிமா நடிகர்களுக்குப் பல்வேறு ரசிகர் மன்றம் உள்ளன. காமராஜருக்குப் பிறகு, நல்ல அரசியல் தலைவர் அண்ணாமலை.

இது போன்ற தலைவரைக் கொண்டாட வேண்டும். மன்றம் அமைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத் தொடங்கியுள்ளோம். பாஜகவில் நாங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தான் ரசிகர் மன்றம் அமைத்துள்ளோம்” என்று கூறினார்.

பா.ஜ.க கலை மற்றும் கலாசார பிரிவு மேற்கு மாவட்டத் தலைவர் தங்கமணி
தங்கமணி

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டதன் பின்னணி என்னவாக இருக்கும் என அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளவர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *