
சென்னை: நான் முதல்வன் திட்டம் மூலம் ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருவதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார். தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழுமம், மத்திய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து தென் மண்டல இளையோருக்கான ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் தொழில் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் செயற்குழு உறுப்பினர் வனிதா அகர்வால், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறையின் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் வீர ராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.