
‘எம்பிக்கள் அனைவரும் மக்களுடன் பயணிக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன’ என அலெர்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின்.
மந்திரிகள்,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இடையே நல்லுறவு இல்லை என்பதால் இந்த வார்னிங். அதிமுகவிலோ மூன்று அடி, அதிர வைக்கும் பிரச்சார வெடி என பயணிக்கிறது தலைமை.
செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து, உட்கட்சியில் செங்கோட்டையனுக்கு, கோபியில் செக் வைத்து புது டிராக் எடுத்துள்ளார் எடப்பாடி.
அதே நேரம் அடுத்தடுத்து நயினாரின் டெல்லி பயணம் அங்கே அமித்ஷாவை சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றது. இதற்கிடையே தனிக்கட்சி, டிடிவி தினகரன் நெருக்கம் என புது ரூட் எடுத்திருக்கும் அண்ணாமலை. அவர் வைக்கும் ட்விஸ்ட். இதற்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன் என ஆளுக்கு ஒரு டார்கெட்டோடு பயணிக்கிறார்கள். புழுதி பறக்கும் அரசியல் பயணம்.