
லக்னோ: ‘தற்சார்பு இந்தியா – சுதேசி சங்கல்ப்’ என்ற பெயரில் லக்னோவில் நடந்த மாநில அளவிலான பயிலரங்கில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் கடந்த 1100-ம் ஆண்டில் இந்துக்களின் மக்கள் தொகை 60 கோடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட அந்நிய ஊடுருவல் காரணமாக இந்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்துக்களின் எண்ணிக்கை வெறும் 30 கோடியாக இருந்தது. 800 முதல் 900 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.