• September 25, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்​றத்​துடன் வெகு சிறப்​பாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. கொடியேற்​றத்தை முன்​னிட்​டு, ஏழு​மலை​யான் கோயி​லில், நேற்று மாலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பரை ஊர்​வல​மாக தங்க கொடிமரத்​தின் அருகே கொண்டு வந்​தனர். அங்கு வேத​பண்​டிதர்​கள் வேதங்​கள் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க, கருடன் சின்​னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்​தில் ஏற்றப்பட்டது.

இது முப்​பது முக்​கோடி தேவாதி தேவர்​களை​யும் பிரம்​மோற்​சவத்​துக்கு அழைப்பு விடுப்​ப​தற்​கான ஒரு நிய​தி​யாகும் என கூறப்​படு​கிறது. இதனை தொடர்ந்​து, வரும் அக்​டோபர் மாதம் 2-ம் தேதி வரை தின​மும் காலை​யில் 8 மணி முதல் 10 மணி வரை​யிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் வித​வித​மான வாக​னங்​களில் 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிக்க உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *