
புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், குலாம் நபி ஆசாத் உள்பட 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் 2021-ம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் காலியாக இருந்தன.
இந்நிலையில், தற்போது ஜம்மு – காஷ்மீருக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் உள்ளதால் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.